புதிய வழங்குநரை(vendor) உருவாக்குவது
இந்த வழிகாட்டி, மெர்சண்ட் செயலியில் இருந்து புதிய வழங்குநரை உருவாக்கி, கொள்முதல் பில்கள், கட்டணங்கள் மற்றும் வழங்குநர் வரலாற்றை துல்லியமாக கண்காணிப்பது எப்படி என்பதை விளக்குகிறது.
தொடங்குவதற்கு முன்
- மெர்சண்ட் செயலியில் உள்நுழைந்திருக்க வேண்டும்
- Purchases (கொள்முதல்கள்) பகுதிக்கு Edit access இருக்க வேண்டும்
படி 1: வழங்குநர் பட்டியல் திரையை திறத்தல்
- Main Menu → Purchases → Vendors பகுதிக்கு செல்லவும்
- வழங்குநர் பட்டியல் திரையில் ஏற்கனவே உள்ள வழங்குநர்கள் காணப்படும்

படி 2: புதிய வழங்குநரை சேர்த்தல்
- Add Vendor / வழங்குநர் சேர்க்கவும் பொத்தானை தேர்வு செய்யவும்

2. Create Vendor படிவம் திறக்கப்படும்

படி 3: அடிப்படை வழங்குநர் விவரங்கள்
பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:
- பெயர்(Name) – தொடர்பு நபரின் பெயர்
- நிறுவனத்தின் பெயர்(Company Name) – வணிக / சட்டபூர்வ பெயர்
- தொடர்பு எண்(Contact number) – கைபேசி / தொலைபேசி
- மின்னஞ்சல்(Email) (விருப்பம்) – பில் / ஆணைகள் அனுப்ப
- FSSAI எண் (விருப்பம்)
- GST எண் (விருப்பம்)
இந்த விவரங்கள் கொள்முதல் மற்றும் கட்டண செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும்.
படி 4: முகவரி விவரங்கள்
Address தாவலில்:
Billing Address
- நாடு / பிராந்தியம் (Country / Region)
- முகவரி (Address)
- நகரம் (City)
- மாநிலம் (State)
- PIN Code
Delivery Address
- Billing Address மற்றும் Delivery Address ஒரே மாதிரி என்றால் Copy Billing Address தேர்வு செய்யவும்
- இல்லையெனில் தனியாக விநியோக முகவரியை உள்ளிடவும்
படி 5: வங்கி விவரங்கள் (விருப்பத்தேர்வு)
Bank Details தாவலில்:
- Account Holder Name
- Bank Name
- Account Number
- IFSC Code
இந்த விவரங்கள் கட்டண பதிவு செய்ய உதவும்.
படி 6: வழங்குநரை சேமித்தல்
- உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்
- Submit பொத்தானை தேர்வு செய்யவும்
சேமிப்பு முடிந்ததும், புதிய வழங்குநர் Vendor List-ல் காணப்படும் மற்றும் Purchase Bill உருவாக்கும் போது நேரடியாக தேர்வு செய்யலாம்.